நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி.

Published:

edappadi in karur - 2026

நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது என்று பேசினார் முதலமைச்சர் பழனிசாமி.

தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூ., கூட்டணி மேற்கொண்டுள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார் என்று கூறினார் முதலமைச்சர் பழனிசாமி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றார். அப்போது அவர், மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென நாடே எதிர்பார்க்கிறது என்று பேசினார்!

130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும், மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என நாடே எதிர்பார்க்கின்றனர்… என்றார்.

பின்னர் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி.

பிரசாரத்தின் போது பேசிய அவர், 130 கோடி மக்களை காக்கக்கூடிய வலிமையான பிரதமர் நரேந்திர மோடிதான். மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது. தமிழகத்தில் ஒரே அணியில் இருக்கும் காங்கிரசும், கம்யூனிஸ்டும், கேரளத்தில் இரு வேறு அணிகளாக போட்டியிடுகின்றன. சந்தர்ப்பவாத கூட்டணியாகவே திமுக அணி காட்சி தருகிறது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

தமிழகத்தை பாலைவனமாக்க தி.மு.க. கூட்டணி முயல்கிறது. கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என ராகுல்காந்தி கூறுகிறார். அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும்! ஆனால் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவையை வளப்படுத்த அதிமுக கூட்டணி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊழலைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை! பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் நம் பிரதமர் மோடி என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Related articles

Recent articles

spot_img