உச்சி வெய்யிலில் பிரசாரம் தவிர்க்கவும்: வானிலை மையம் எச்சரிக்கை!

சற்றுமுன் சென்னை தமிழகம்

stalin campaign - 2026

உச்சி வெய்யிலில் பிரசாரம் செய்வதை தவிர்க்கவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வேட்பாளர்களையும் அரசியல் கட்சியினரையும் எச்சரித்துள்ளது.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் தவிர்க்க வானிலை மையம் அறிவுரை கூறியுள்ளது. காரணம் மண்டையைப் பிளக்கும் வெய்யில் தான்! அதனால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகளைக் கூறி எச்சரிக்கையும் செய்துள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் மூன்று மாவட்டத்தில் 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது வெப்பநிலை அளவு.

கரூர் பரமத்தி – 106.1 டிகிரி பாரன்ஹீட் …!
சேலம் – 105.8 டிகிரி பாரன்ஹீட் …!
வேலூர் – 105.2 டிகிரி பாரன்ஹீட் ….! – என்று வெய்யில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் பகல் நேரத்தில் வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது கவனமுடன் இருக்கவும், பகல் நேர பிரசாரத்தை தவிர்க்கவும் அறிவுரை கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.