அப்படி என்றால்…? திமுக., கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிவிடும்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
thirumavalavan stalin - 2026

சென்னை: அப்படி என்றால் திமுக., கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது! காரணம் திருமாவளவன் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுதான்.!

செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறாது என்று உறுதியாகக் கூறினார். மேலும்,

பாஜக., இடம் பெறும் கூட்டணியில் அங்கம் வகிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் கூறினார்

திருமாவளவன்!

இதனிடையே இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவுடனும் கூட்டணி குறித்து பேசி வருவதாகத் தெரிவித்திருந்தார்.

கூட்டணி குறித்து திமுக மற்றும் அதிமுக உடன் பேசி வருகிறோம்; முடிவான உடன் கூறுகிறேன் என்றார் #அன்புமணி! இந்நிலையில், பாமக., ஒருவேளை திமுக கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகிவிட்டால், திருமாவளவன் அங்கே இருக்க மாட்டார் என்பது உறுதியாகிவிடும். இதனால்தான், பாமக,. குறித்து கொள்கையற்றவர்கள் என்று விமர்சித்து வருகிறார் திருமாவளவன். அவர் கூறுவது போன்றே கொள்கையற்றவர்கள் என்பது உறுதியாகிவிட்டால், திருமாவளவன் பாடு திண்டாட்டமாகிவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.