விவசாயி சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பொறித்திருக்கிறார்கள்… மனம் குமுறிய சீமான்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

seeman e1538589747761 - 2026

வாக்குப்பதிவு எந்திரங்களில் தங்கள் கட்சியின் சின்னம் திட்டமிட்டே தெளிவாக பொறிக்கப்படாமல் மங்கலாக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்! அப்போது அவர், தங்கள் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம், வாக்குப்பதிவு எந்திரங்களில் தெளிவற்றதாக உள்ளது என்றார்.

இது குறித்து நீதிமன்றத்தை நாடிய போது, தேர்தல் ஆணையம் அதனை மாற்ற நேரமில்லை என கூறிவிட்டது; எனவே ஊடகங்கள் மூலம் மக்கள் மன்றத்தை நாடியிருக்கிறேன் என்றார்.

தங்கள் சின்னம் தெளிவில்லாமல் சிறியதாக இருக்கிறது; திட்டமிட்டே தங்கள் சின்னம் மறைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் சீமான்.

தொடர்ந்து, தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி என விமர்சனத்தை முன்வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.