குப்பை பொறுக்கும் சிறுமியைக் கூட விட்டு வைக்காத பாவிகள்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை

girl attack image - 2026

குப்பை பொறுக்கும் சிறுமியை கூட விட்டு வைக்காமல் தங்கள் பாலியல் இச்சை தீர்க்க கபடம் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இந்நிலையில் அந்த சிறுமி தான் குளிர்பானம் குடித்ததும் மயங்கி விட்டேன்…. அதன்பின் எனக்கு என்ன நடந்தது என தெரியாது என்று குப்பை பொறுக்கும் சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் ஏரிக்கரையில் மூன்று ஆண்களால் தனியாக இறக்கிவிடப்பட்ட சிறுமி குறித்து போலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஏரிக்கரையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த ஆட்டோ நின்றது.

ஆட்டோவிலிருந்து இறங்கிய மூன்று பேர், சிறுமி ஒருவரை கைத்தாங்க லாகக் கீழே இறக்கினர்.

பின்னர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றனர். இதனைபார்த்த தொழிலாளர்கள், வேகமாக ஓடிச்சென்று ஆட்டோ ஓட்டுநர்களில் இரண்டு பேரை விரட்டிப் பிடித்தனர்.

மயக்க நிலையில் இருந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.