செங்கோட்டையில் இந்து விழிப்பு உணர்வு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைதானவருக்கு ஜாமீன்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

IMG 20190417 WA0019 - 2026

இந்துமத கடவுள்களை இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை..  என விழிப்பு உணர்வு ஸ்டிக்கர் ஒட்டியதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட செங்கோட்டை நகர தலைவர் முருகன் இன்று ஜாமீனில் வெளியே வந்தார்

ஸ்டிக்கர் ஒட்டினார் என்று வழக்கு பதிவு செய்யப் பட்டு செங்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த இந்து முன்னணி செங்கோட்டை நகர தலைவர் R. முருகன் இன்று காலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரை சிறை வாசலில் நெல்லை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம் ஆகியோர் வரவேற்றனர்.

~ க.குற்றாலநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.