நாடு முழுக்க அலசி ஆராய்ஞ்சாலும்… தமிழகம்தான் டாப்…!

Published:

velloremoneycaptured2 - 2026

மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பறக்கும் படையினர் சோதனை செய்ததில், கோடிக்கணக்கில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகமே உச்சபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் பறக்கும்படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.2,628.43 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் பணம் பொருள்கள் பறிமுதலில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது!

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

தேசிய அளவில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி அனைத்து மாநிலங்களிலும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது

இந்த சோதனைகளில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் தங்கம் வெள்ளி வைரம் மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன

நேற்று வரை நாடு முழுவதும் 125 கோடி ரூபாய் பணம் 232.62 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 1168.54 கோடி ரூபாய் மதிப்பில் போதைப்பொருள்கள் 956 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வெள்ளி பொருட்கள் 46.56 கோடி ரூபாய் மதிப்புள்ள இதர பொருள்கள் என 3,105.56 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் தமிழகமே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது தமிழகத்தில் 215.15 கோடி ரூபாய் ரொக்கம் 2004.3 கிலோ தங்கம் 645 கிலோ வெள்ளி என மொத்தம் 933.94 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

பணம் பொருள்கள் பறிமுதலில் குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது! தமிழகத்தில் இன்னும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் பறிமுதல் பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது!

Related articles

Recent articles

spot_img