தகுதியற்ற ஆசிரியர்கள்; தகுதிபெறாத நீதிபதிகள்! திராவிடத்தின் ‘சாதனை’!

teachers - 2026

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகளுக்குக்கான தேர்வில் தேர்வெழுதிய 3500 #கீழமைநீதிபதிகளில் ஒருவர் கூட #தேர்வாகவில்லை…150க்கு 40 மார்க் எடுத்தால் பாஸ்…20 பேர் மட்டுமே பாசிட்டிவ் மார்க்… வேறு எல்லோருமே நெகட்டிவ் மார்க்தான் புதுச்சேரியும் இதே கதிதானாம்!

வெளங்கும்….. இவர்கள் தான் நாளை தீர்ப்பு எழுதக்கூடியவர்கள்…. ஒரு காலத்தில் ஆகச்சிறந்த வழக்குரைஞர்கள், நீதிபதிகள் தந்த தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு யார் காரணம்? உண்மையான காரணம் சொன்னா வேறு எங்கோ விவாதம் போய் முடியும்….. ஏ தாழ்ந்த தமிழகமே!!!

பல முரன்பாடான தீர்ப்புக்கள் வருவதற்கான காரணம் இப்போது தெரிந்துவிட்டது,
150 மார்க்குக்கு 40 மார்க் வாங்க வக்கில்லாதவர்கள் எப்படி நீதிபதி ஆனார்கள்.

1500 பேர் தேர்வு எழுதியதில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை… என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கோபத்தை கருத்துகளாக எழுதி வருகின்றார்கள்.

27 July23 Teachers counselling - 2026தமிழகம் முழுவதும் 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது நீதித் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இணைந்து நடத்திய இந்த தேர்வில், சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 3562 பேர் பங்கேற்றனர்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இதன் பிரதான தேர்வு மே 25, 26ஆம் தேதிகளில் நடக்க உள்ள நிலையில், முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற சிவில் நீதிபதிகள் உட்பட 3562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல் நிலைத் தேர்வில் பொதுப் பிரிவினர் 60 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52.5 மதிப்பெண்களும், பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடியினர் 45 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறாதவர்கள் பிரதான தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.04 Aug29 Madras High Court - 2026

தற்போது முதல் நிலைத் தேர்வு முடிவுகள் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் தேர்வெழுதிய எவரும் தேர்ச்சி பெறவில்லை! எந்த ஆண்டும் இல்லாத வகையில் கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்ததாலும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறப் படுகிறது. தமிழகம் மட்டுமல்ல, புதுச்சேரியிலிருந்து தேர்வு எழுதிய 558 பேரும் தேர்ச்சி பெறவில்லை என்பது அடுத்த வியப்பான செய்தி.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்வு எழுதியவர்களில் 95% பேர் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகக் கூறப் படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிரதான தேர்வில் கலந்து கொள்ள முடியும்! இந்த நிலையில் இந்த வருடம் பிரதான தேர்வில் தேர்ச்சி பெற நீதிபதிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நீதி மன்றங்களில் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் எழும் என்று தெரிகிறது.

நீதிபதிகள் தேர்வு போல், ஆசிரியர் தகுதித் தேர்வும் இன்னொரு பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றனர். மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியில் நீடிக்கவும் அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு அது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி 2 வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், நோட்டீஸ் பெற்று 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பேறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது கருணைக் காட்டக் கூடாது என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில், 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இது போல், இன்னும் அரசுப் பணியிடங்களில் உள்ள அந்த அந்தத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு தகுதித் தேர்வுகள் வைக்கப் பட்டால், அரசுத் துறையின் லட்சணம் தெரியவரும் என்று குமுறுகின்றனர் பொது மக்கள்.

தகுதியற்ற நபர்களை முறைகேடான வழிகளில் பணிக்கு அமர்த்திய திராவிட இயக்கங்களே இந்தச் சீர்கேட்டுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப் படுகிறது.

1 COMMENT

  1. கவலை பட வேண்டாம்.10ஆம் வகுப்பில் fail,.ஆன உத்திர பிரதேஷ்,பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து காவி கட்சியை சேர்ந்தவர்களால் நிரப்பப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories