9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

rain - 2026

வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, வேலூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் வெப்பம் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

இதனிடையே, வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.