வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்; அரவக்குறிச்சி பிரசாரத்தை ரத்து செய்த கமல்!

Published:

kamalhaasan aravakurichi - 2026

“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் நேற்று கமல்ஹாசன் பேசினார். அது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இன்று காலை நடைபெற இருந்த அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து திரும்பினார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் கருத்துக்கு நெட்டிசன்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இத்தகைய முட்டாள் இந்த கமலஹாசன் பயங்கரவாதம் என்பது 1400 வருடங்கள் பழமையானது முகமது பின் காசிம் இந்தியாவின் முதல் பயங்கரவாதி அவரை பலர் பின்தொடர்ந்தனர்

47 க்கு பிறகு முதல்  பயங்கரவாதி நேரு! அவர்தான் இந்த நாட்டை பயங்கரவாதத்தின் பெயரில் தவறாக வழி நடத்தினார்! ப்ளேபாய் கணக்காக 47க்கு முன்னும் பின்பும் நடந்து கொண்டார் என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

இன்னொருவர் நமக்கு இப்பொழுது முஸ்லிம் லீகின் இன்னொரு உறுப்பினர் கிடைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

மிகக் கேவலமான இயக்குனர் இவர்; ஹேராம் என்ற படத்தை பார்த்திருக்கிறோம் அது சாதாரண படம் அல்ல மிக கேவலமான நீலப்படம்! ஆனால் அதை தேசபக்த படம் என்ற பிரிவின் கீழ் விளம்பரப்படுத்தினார் என்று கூறியிருக்கிறார்

மம்தா பேகத்தை எப்பொழுது கமலஹாசன் பார்க்கப் போனாரோ அப்போதே தமிழக மக்களிடம் அவர் நன்மதிப்பை இழந்து விட்டார் என்று ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது ஆகாதா? என்று தேர்தல் ஆணையத்தை டேக் செய்து ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்

ஹிந்துக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பது மதச்சார்பற்ற தன்மையில் வரும் என்ற நினைப்பில் கமல் பேசுவதாக ஒருவர் கூறுகிறார்

கமல்ஹாசன் பெயர் ஹாசனா அல்லது ஹுஸைனா ? 1947 நேரத்தில் நடந்ததைப் பற்றி இந்த ராஸ்கல் பேசுவது அறியாமை என்று ஒருவர் பதில் கூறியிருக்கிறார்

தமிழ் வெர்ஷன் ஆப் அரவிந்த் கேஜ்ரிவால்! அதுவே கமல்! என்று பதில் கூறியிருக்கிறார் ஒருவர்.

கமலஹாசனின் கட்சியை தொடங்கி வைத்தவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்பதால்தான் இப்படி எல்லாம் கோமாளித்தனமாக கமலஹாசன் உளறுகிறார் என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருக்கிறார்

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பதிவுகளில் பெரும்பாலான கருத்துக்கள் அரவிந்த் கேஜ்ரிவாலையும் கமலஹாசனையும் ஒருங்கிணைத்த படி இருவரும் ஒரே குட்டையில் ஊறிய கோமாளிகள் என்றே காணப்படுகின்றன

காந்தி தேசத்தின் தந்தை என்றால் அவர் தனது கடமைகளில் தோல்வியுற்ற தந்தை என்று கருத்து பதிவிட்டுள்ள ஒருவர் கமலஹாசன் இந்த வரலாறுகளை கட்டாயம் படித்திருக்க வேண்டும் அல்லது படித்தும் தேவையில்லாமல் ஓட்டு பிச்சைக்காக இவ்வாறெல்லாம் தன்னை தரம் தாழ்த்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருக்கிறார்

நல்லவேளை கடவுளே கமல்ஹாசனுக்கு நான் ஓட்டுப் போடாமல் இருந்து இருக்கிறேன் என்று ஒருவர் தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார்

இப்படி பல்வேறு தரப்பினரும் கமலஹாசனின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் அரவக்குறிச்சியில் இன்று தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார் நடிகர் கமலஹாசன்!

Related articles

Recent articles

spot_img