December 6, 2025, 6:17 AM
23.8 C
Chennai

முதல்வர் கனவு ஸ்டாலினுக்கு வெறும் பகல் கனவே! திமுக.,வினரே நாற்காலி வாங்கிக் கொடுக்க வேண்டும்: சரத்குமார்

sarathkumar campaign - 2025

முதல்வர் கனவு மு.க.ஸ்டாலினுக்கு வெறும் பகல் கனவே, தி.மு.க வினர் ஒரு நாற்காலி வாங்கிக் கொடுத்து அந்தக் கனவினை நிறைவேற்ற வேண்டும். அப்போது மட்டுமே அந்தக் கனவு நனவாகும்! என்று கரூர் அருகே அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் சரத்குமார் பேசினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான சரத்குமார், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நொய்யல் குறுக்குச்சாலை, குப்பம், க.பரமத்தி, ஆரியூர், தென்னிலை, தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், இந்த இடைத்தேர்தல் ஏன், எதற்காக நடக்கின்றது என்பதை எல்லோரும் அறிவர்! நான் ஏன் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்குகள் கேட்பதற்காக வந்துள்ளேன் என்பது குறித்தும் உங்களுக்குத் தெரியும்! மக்களுக்கு ஏராளமான திட்டங்களை தீட்டி, ஏழை, எளிய மக்கள் எல்லோருக்கும் பல நல்ல திட்டங்களை தீட்டியவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,

இன்று அவர் நம்முடன் இல்லை என்றாலும், அவரது ஆட்சி இன்றும் எடப்பாடி பழனிச்சாமி வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே, அ.தி.மு.க ஆட்சி இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

நாட்டு மக்களுக்காக இன்னும் பல திட்டங்களை தீட்டி வருகின்றார் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

அதே நேரத்தில் தற்போது எதிர்க்கட்சி வேட்பாளரைப் பற்றி நான் கூற விரும்பவில்லை! அவர் எங்கிருந்த வந்தவர் எந்தெந்த இயக்கங்களுக்குச் சென்றவர் என்பதை எல்லோரும் அறிவர்!

மரியாதையும் சிறப்பும் கொடுத்து, அமைச்சர் பதவியும் கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அ.தி.மு.க இயக்கம். ஆனால், எந்த இயக்கம் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்ததோ, அந்த இயக்கத்தினை தனது சுயநலத்திற்காக, யாரெல்லாம், புரட்சித் தலைவியை எதிர்த்தார்களோ, அவர்களோடு கூட்டுசேர்ந்து தற்போது எதிர்த்து நிற்கின்றார்.

யார் இந்தத் தேர்தல்களை நடத்தக் கூடாது என்று இருந்தார்களோ அவர்களுடன் தற்போது கூட்டு சேர்ந்து தற்போது நிற்கின்றார். இருப்பினும் அவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை, அதேநேரம் அவர், அங்கிருந்து அமமுக சென்று அங்கிருந்து தி.மு.க வில் ஐக்கியமாகியுள்ளார்.

ஆக, அந்த வேட்பாளரை பல ஆண்டுகளாக நான் பார்த்துக் கொண்டு தான் வருகின்றேன்! அந்த இயக்கத்தில் தளபதி என்று ஒருவர் உள்ளார். அந்த இயக்கத்திற்கு, அந்த தலைவருக்கு சுதந்திர தினம் எப்போது என்று தெரியாது, குடியரசு தினம் எப்போது என்று தெரியாது! ஏன் இந்த இடைத்தேர்தலே, வரும் 18 ஆம் தேதி என்று ஒரு சில இடங்களில் கூறி வருகின்றார்.

யார், ஒருவர் மக்களுக்காக திட்டங்களை தீட்டி மக்களுக்காக மட்டுமே வாழ்கின்றனரோ, அவர் தான் முதல்வர்! ஆனால் மு.க.ஸ்டாலினோ, முதல்வர் நாற்கலி மட்டுமே அவரது கனவு, ஆங்காங்கே வரும் 23 ஆம் தேதிக்குப் பிறகு நான்தான் முதல்வர் என்று கனவு கண்டு வருகின்றார்.
சட்டசபைக்குச் செல்கின்றாரா? இல்லை, சட்டசபை சென்றுவிட்டு சட்டையைக் கிழித்துக் கொண்டு வருகின்றார்.

இப்படிப் பட்டவர்தான் தி.மு.க தலைவர், ஆனால் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டியதோடு, இந்தியாவிலேயே இலவச மடிக்கணினி கொடுத்த ஒரே அரசு இந்த தமிழக அரசு!.

தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்க இருக்கும் பட்சத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் அறிவிக்கப்பட்டது தான் மழைநீர் சேகரிப்பு திட்டம்! அவரது வழியில் தொடரும் ஆட்சியால் ஆங்காங்கே ஏரி, குளங்கள் தூர்வாரப் பட்டு, சரிசெய்யப்பட்டு வருகின்றது.

பொங்கலுக்காக ரூ ஆயிரம் கொடுத்தது. பொங்கல் பரிசுகளையும் கொடுத்து, ஏழை, எளியவர்களுக்காக ரூ 2 ஆயிரம் திட்டத்தினையும் தர உள்ளது.

எனவே, அ.தி.மு.க வை யார் நினைத்தாலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது, மு.க.ஸ்டாலினால் முடியாது.,

மு.க.ஸ்டாலினுடைய முதல்வர் கனவு நிறைவேறாது, வேண்டுமென்றால் தி.மு.க வினர் நீங்கள் ஒரு சேர் வாங்கிக் கொடுத்தால் மட்டும் தான் நாற்காலி கனவு தீரும்,

ஆகவே, நமது வேட்பாளர் அ.தி.மு.க வினைச் சார்ந்த செந்தில்நாதன்தான்! சரத்குமார் வந்தார், ஏதோ, கூறினார் என்று நினைக்காமல், வரும் 19 ஆம் தேதி அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதனை வெற்றி பெற வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

1 COMMENT

  1. மாதிரி சட்டசபை நடத்திய தி.மு.க.வுக்கு ஸ்டாலினை மாதிரி முதலமைச்சராக அறிவாலயத்தில் அமர வைப்பது sulabame.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories