காமஹாசா – இனி நீ ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது-!

Published:

kamal torch - 2026

உன்னுடைய,
உன்னைப்போல் ஒருவன் – பார்த்து –
நீயும்,
என்னைப் போல் ஒருவன் என்று
நினைத்திருந்தேன் –

உன் இந்தியன் படம் பார்த்து
இவனைப் போல் யார்? என்று இறுமாந்திருந்தேன் –

இறுதியில் விஸ்வரூபம் எடுத்தும் எங்களை வியக்க வைத்தாய் –

உன் தசா அவதாரங்களையும்
உண்மை என்று நம்பி இருந்தேன் –

உன் பஞ்சதந்திரங்கள் அறியாமல் _
கமல் ரசிகன் என்று பாவம் நாசமானேன்.

வறுமையின் நிறம் சிவப்பு என்று நீ கூறிய போதே –
என்னுடைய நிறமும் சிவப்பு என்று கூறியிருந்தால் –

அன்றே உன்னை அடையாளம் கண்டிருப்போம் –
இன்று உன்னை டிவிட்டரில் மட்டுமல்ல
கூகுளில் தேடினாலும் தெரியாதென்ற நிலை வந்திருக்கும் –

உன் அடையாளத்தை வெளிக்காட்டவே உனக்கு –
அரை நூற்றாண்டு தேவைப்பட்டிருக்கிறது –

உன் திரையுலக அனுபவம் என்பது கடுகளவு ,
ஆனால்,
இந்து மதம் என்பது மஹா சமுத்திரம் –

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

முட்டுச் சந்தில் நின்று இந்துக்களுக்கு சவால் விடாமல் –

முற்றிய உன் மனச்சிதைவு நோய்க்கு _
மருந்து கிடைக்கிறதா என்று பார் –

காமஹாசா –

இனி நீ ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது –

  • ??? (சமூகத் தளத்தில் வைரலான கவிதை)

Related articles

Recent articles

spot_img