இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில்… டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் மூடல்!

Published:

21 May28 TASMAC - 2026

இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப் படுகின்றன.

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, டாஸ்மாக் கடைகளை மூட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்
அதன்படி இன்று மாலை முதல் மே 19ஆம் தேதி இரவு வரை மூன்று நாட்களுக்கு இந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related articles

Recent articles

spot_img