’தொங்கு’ கூடாதென்ற எண்ணம்தான் : ஹெச்.ராஜா!

சற்றுமுன் தமிழகம்

voting lastphase - 2026

தொங்கு நாடாளுமன்றம் அமைந்து விடக் கூடாதென்ற எண்ணம்தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற மக்களவைக்கான கடைசிக் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், மக்கள் ஆர்வத்துடன் வந்து அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக., வேட்பாளரும், பாஜக., தேசிய செயலருமான ஹெச்.ராஜா, மக்கள் பாஜக.,வுக்கு அதிக அளவில் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
அனைத்து மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது யாருக்கு சாதகம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் எக்காரணம் கொண்டும் தொங்கு பாராளுமன்றம் வந்துவிடக் கூடாது என்று எண்ணியவர்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர் என்பதே காரணம்.. என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.