
மதுரை: சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிற்கு பரிந்துரைத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி- மதுரையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி. அளித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன்னிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொனில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க
தேவர் சிலைக்கு, அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014 ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.
மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின்
போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று , குருபூஜை முடிந்த பின்னர் , அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்தும் , பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட காரணத்தால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் இருந்து எடுக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.
அதன் பின்னர், அதிமுகவின் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்தாண்டு 2025 – ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜயந்தி விழாவை முன்னிட்டும், 63-வது குருபூஜை முன்னிட்டும், இன்று தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனா ஆகியோர் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கையெப்பமிட்டு, வங்கி லாக்கரில் இருந்து எடுத்தனர்.
பின்னர், அந்த தங்க கவசம் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது , அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதனை அடுத்து, தங்க கவசத்தை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
எடுத்துச் செல்லப்படும் தங்க கவசம் , தேவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து அணிவிக்கப்படும். தேவர் ஜெயந்தி விழா 30 ஆம் தேதி முடிந்த பின்னர் வருகின்ற 1- ஆம் தேதி மீண்டும் தங்க கவசம் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் , தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனால் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
தொடர்ந்து , முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-
சுதந்திரப் போராட்ட வீரர் எம்.எல்.ஏ .எம்பி, ஆக ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு. அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேவர் நினைவிடத்திற்கு வழங்கிய 13.5 அரை கிலோ தங்க கவசத்தை முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் புறப்பட்டு பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன்பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தியாகத்தை போற்றிட பாரத ரத்னா விருதிற்காக மத்திய அரசிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரைத்துள்ளார் என ,
தெரிவித்துள்ளார்.





