
தாம்பரம் – திருநெல்வேலி – திருச்செந்தூர் -தாம்பரம் சிறப்பு ரயில் மேலும் நெல்லை திருச்செந்தூர் இடையே முழுவதும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படுகிறது . திருச்செந்தூர் செல்ல சிறப்பு ரயில் அறிவித்துள்ளது முருகன் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்றும் பிற பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
06135/06136 தாம்பரம் –திருநெல்வேலி திருச்செந்தூர் — தாம்பரம் சிறப்பு ரயில்
அக்டோபர் 26 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது .
அக்டோபர் 27 திங்கட்கிழமை அன்று திருச்செந்தூரிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் விருதாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி வழியாக செல்கிறது.
திருச்செந்தூரிலிருந்து புறப்படும் ரயில் கூடுதலாக ஆறுமுகநேரி நாசரேத் ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர் ஆகிய நிலையங்களிலும் நின்று செல்லும்.
காலை நேரத்தில் திருச்செந்தூரில் நடைமேடை சிக்கல் உள்ளதால் இந்த ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படுகிறது . திருநெல்வேலியில் இருந்து இணைப்பு ரயில் மூலம் திருச்செந்தூர் செல்லமுடியும் அல்லது பேருந்து மூலமாகவும் செல்ல முடியும்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்கு செல்லக்கூடிய பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.





