ஏப்ரல் 14, 2021, 1:49 காலை புதன்கிழமை
More

  மருத்துவமனை சென்ற நர்சை கொடூரமாகக் கொல்ல முயன்ற இளைஞர்! போலீசார் விசாரணை!

  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி

  nurse murder attempt in karur - 1

  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருபவர் சத்தியா (வயது 40)

  இன்று வாராந்திர தகவல் அறிக்கை கொடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உடையாப்பட்டியிலிருந்து காணியாளம்பட்டி செல்லும் வழியில் உள்ள சுக்காம்பட்டி என்ற பகுதியில் வந்த போது, திடீரென செவிலியரின் வாகனத்தை மறித்த ஒருவர் நர்சை சரமாரியாக அரிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

  இந்தத் தாக்குதலில் நர்சின் தலை மற்றும் வலது கை பலமாக வெட்டுப்பட்டுள்ளது. படு காயமடைந்த செவிலியர் சத்யா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்!

  இச்சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் சதீஷ் குமாருடன் சத்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விவாகரத்து ஆனதாகத் தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தின் அருகே மர்ம நபர், சுற்றித் திரிந்தது தெரிய வந்துள்ளது.

  இச்சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் தாக்குதலுக்கு ஆளான நர்ஸ் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட நிலையில், மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளது முன்னாள் கணவரா, அல்லது வேறு நபர்கள் யாருமா என்ற கோணத்தில் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  3 × five =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »