
கணவனின் தொல்லை தாங்க முடியாமல் மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வாலாந்தரவை அருகில் முனுசுவலசை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் மாற்றுத் திறனாளி, இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான முனியசாமி தினமும், குடித்துவிட்டு வந்து மனைவி குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது கணவரை மல்லிகா அடிக்கசென்றுள்ளர். இதனால் கோபம் கொண்டமுனியசாமி நன்றாக குடித்துவிட்டு தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் மிகவும் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த மல்லிகா இதற்குமேல் இவரை சமாளிக்க முடியாது என்று எண்ணியுள்ளார். இந்நிலையில் முனியசாமி இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது வீட்டுக் கூரையின் மீது மண்ணெண்ணையை ஊற்றி மல்லிகா அவரை எரித்துள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .தனது கணவனை எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற மல்லிகா அருகில் இருக்கும் தனது உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளார் இதனிடையிய அக்கம்பக்கத்தினர் மல்லிகா வீட்டில் நடந்தவற்றை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மல்லிகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் என் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னையும் என் குழந்தையையும் அடிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் மேலும் நேற்று என் கழுத்தை நெரித்து கொல்ல வந்ததாகவும் இவர் தொல்லை தாங்க முடியாமல் தான் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் காவல்துறையினர் அவர் தன் கணவனை கொன்றதற்கு இதுதான் காரணமா இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.