15 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை! தலைமறைவான இளைஞர்!

Published:

vankodumai 1 - 2026

திருச்செந்தூர் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டெபின் (22). இவர் அதே பகுதியை சேர்ந்த மீனவரின் உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரம் அறிந்த பெண்ணின் வீட்டார் ஸ்டெபினை கண்டித்து உள்ளனர். மேலும், அவரை வெளியூறுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை மீனவரின் வீட்டிற்கு சென்ற ஸ்டெபின், அங்கு வாசலில் நின்றிருந்த அவரது 15 வயது மகளிடம், காதலியின் செல்போன் எண் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஸ்டெபின் அவரை அவதூறான சொற்களால் திட்டியதுடன், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தபோது, ஸ்டெபின் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் ஸ்டெபின் மீது வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக தேடி வருகின்றனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img