அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் மரணம்….!

Published:

water deth 2 - 2026

ராமநாதபுரம் புதுமடம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சொர்ணமுத்து. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 17). இவர் பிளஸ்-1 படித்து உள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய உறவினர்களுடன் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க வந்தார். அங்கு உறவினர்கள் அனைவரும் அருவியில் குளித்தனர்.

முத்துகுமார் மட்டும் தனியாக அங்குள்ள தடாகத்தில் குளிக்க சென்றார். அப்போது அந்த தடாகத்தில் ஆழமான பகுதியில் பாறை இடுக்கில் முத்துகுமாரின் கால் சிக்கியது. இதனால் மூச்சுத்திணறிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தடாகத்தில் குளிக்க சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரை உறவினர்கள் தேடினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே வனத்துறையினர் மற்றும் அப்பகுதியினர் விரைந்து சென்று, தடாகத்தில் இறங்கி தேடினர்.

அப்போது தடாகத்தில் மூழ்கி இறந்த முத்துகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த முத்துகுமாரின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related articles

Recent articles

spot_img