திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

thiruvattaru kodiyetru - 2026

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவப்பெருமாள் கோவில் கடந்த ஆண்டு ஜூலை 6.ந்தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய அளவில் வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதக்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். பங்குனித் திருவிழாவின் முதல் நாளான இன்று (27.ந்தேதி) காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், காலை 8.45லிருந்து 9.21 மணிக்குள் வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்று விழா நடைபெற்றது. இன்று மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

2.ம் நாள் (28.ந்தேதி) காலை 8 மணிக்கு நவநீத நாராயணீய சமிதி வழங்கும் நாராயண பாராயணம், மலை 6 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி, 3.ம் நாள் (29.ந்தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 6. மணிக்கு நம்மாழ்வார் குறித்து ஆன்மீக சொற்பொழிவு, இரவு 7.45 மணிக்கு தேவார பஜனை, இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியன நடக்கிறது. நான்காம் நாள் (30.ந்தேதி) காலை 8 .மணிக்கு பாகவத பாராயணம், இரவு 7 மணிக்கு சங்கீத நாட்டியம் இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல்,இரவு 10 மணிக்கு நளசரிதம் கதகளி, 5.ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, இரவு 7.30 மணிக்கு பரத நாட்டியம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று, தொடர்ந்து கருடவாகனத்த்தில்சுவாமி பவனி வருதல், கல்யாண சவுகந்திகம் கதகளி ஆகியனவும், 6.ம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15 மணிக்கு பரத நாட்டியம் 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கர்ணசபதம் கதகளி ஆகியனவும் நடக்கிறது.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?
thiruvattaaru kodiyetru - 2026

7.ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம் காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் தொடர்ந்து கீசக வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

8.ம் நாள் இரவு 7 மணிக்கு டான்ஸ், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி,9.ம் நாள் ( ஏப்ரல் 4ந்தேதி) இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை க்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், இரவு 12 மணிக்கு கிராதம் கதகளி, 10. நாள்( ஏப்ரல் 5.ந் தேதி) காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல், கழுவன் திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச்சென்று மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு நிகழ்ச்சி, ஆறாட்டு முடிந்து கோவிலுக்கு சுவாமி திரும்புதல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories