காணக் கிடைக்காத டி20 ஆட்டம்: மேற்கு இந்தியத் தீவுகள் vs தென் ஆப்பிரிக்கா!

sa vs wi - 2026
#image_title

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் 2ஆவது போட்டி மார்ச் 26ஆம் தேதியன்று செஞ்சூரியனில் நடைபெற்றது.

அதில் பூவா தலையா வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

எனவே முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவரில் 258/5 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் உலகச் சாதனை படைத்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் ப்ரெண்ட் கிங் 1 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜான்சன் சார்லஸ் வெறும் 39 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரி 11 சிக்சர்களுடன் 118 (46) ரன்கள் விளாசி அவுட்டான அவருடன் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய கெயில் மேயர்ஸ் 5 பவுண்டரின் 4 சிக்சருடன் 51 (27) ரன்கள் எடுத்தார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இறுதியில் கேப்டன் ரோவ்மன் போவல் 28 (19) ரோமாரியா செபார்டு 41* (18) ஓடின் ஸ்மித் 11* (5) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 3 விக்கெட்களை சாய்த்தார்.
அதன் பின்னர் 259 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பந்து வீச்சில் வாங்கிய அத்தனை அடியையும் பேட்டிங்கில் பதிலடியாக முரட்டு அடி கொடுத்தது என்றே சொல்லலாம்.

குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் குயிட்டன் டீ காக் – ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் வெறித்தனமாக பேட்டிங் செய்து 6 ஓவரிலேயே 102/0 ரன்கள் குவித்து மிரட்டல் தொடக்கம் கொடுத்தனர். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் 100+ ரன்கள் குவித்த முதல் அணி (முழு அந்தஸ்து பெற்ற அணிகளில்) என்ற உலக சாதனையும் தென்னாப்பிரிக்கா படைத்தது. அதே வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய அந்த ஜோடி 10.5 ஓவரிலேயே 152 ரன்கள் ஓப்பனிங் பார்ன்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்த போது 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்த குயின்டன் டீ காக் 100 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

அடுத்து வந்த ரீலி ரோசவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 16 (4) ரன்களும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ரீசா ஹென்றிக்ஸ் 11 பவுண்டர் 2 சிக்சருடன் 68 (28) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 10 (10) ரன்களில் அவுட்டானாலும் அற்புதமான தொடக்கம் கிடைத்ததை பயன்படுத்திய கேப்டன் ஐடன் மார்க்கம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38* (21) ரன்களும் ஹென்ட்ரிச் கிளாசன் 16* (7) ரன்களும் விளாசி மெகா பினிஷிங் கொடுத்தனர்.

அதனால் 18.5 ஓவரிலேயே 259/4 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் வித்யாசத்தில் வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 250+ ரன்களுக்கும் மேல் வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக உலக சாதனை படைத்தது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாகவும் தென் ஆப்பிரிக்கா அணி உலகச் சாதனை படைத்தது.

அந்த முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 434 ரன்களை வெறித்தனமாக சேசிங் செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா தற்போது அதே போல வெஸ்ட் இண்டீஸ் எதிராகவும் அதே முறையில் சேசிங் செய்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ளது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories