செந்தில் பாலாஜி எப்போது தூக்கில் தொங்குவார்? கேட்டு சொல்லுங்கள்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

உரத்த சிந்தனை சற்றுமுன் திருச்சி

vijayabhaskar karur - 2026

மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி தூக்கில் தொங்குவது எப்போது, என்று கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.

கரூர் காந்திகிராமம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் கட்டுமான பணிகள் நிறைவுறும் தருவாயில் இந்த ஆண்டு 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதையொட்டி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் சுமார் 4 மணி நேரமாக ஆய்வு நடத்தினார். அப்போது விரைவில் இந்த மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அதற்காக நாங்கள் தேதியை கேட்டிருக்கிறோம், தமிழக அளவில் இந்த பல்நோக்கு மருத்துவமனைகள் கொண்ட இந்த கல்லூரி கரூர் மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்,

ஏற்கனவே, இருக்கும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதியவர்களுக்காக பயன்பாட்டில் இருக்கும்… என்றார்.

மேலும் இந்நிலையில் அமமுக வில் இருந்து தொடர்ந்து திமுக விற்கு வந்து கொண்டிருக்கின்றனரே என்ற கேள்விக்கு, ஒரு சிலர் மட்டும் தான் திமுக விற்கு செல்வதாகவும் மற்ற அனைவரும் தாய் கழகத்திற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்… என்றார்.

மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தான் ஜெயித்து விட்டதாகவும், அமைச்சராகிய என்னை பதவி விலக தயாரா ? என்று செய்தியாளர்களிடம் கூறி வருவதாகவும் கேள்வி எழுப்பிய விஜயபாஸ்கர், அதற்கான விளக்கமும் அளித்தார்.

நான் ஜெயித்தால் பதவி விலக தயார் என்று கூறியது அமமுக வில் இருக்கும் போது !

அதே செந்தில் பாலாஜி டிடிவி தினகரனை முதல்வராக்க விட்டால் தூக்கில் தொங்குவேன் என்று கூறியுள்ளாரே, எப்போது தூக்கில் தொங்குவார் என்பதனை செய்தியாளர்களே கேட்டுச் சொல்லுங்கள் என்றார் விஜயபாஸ்கர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.