மோடியை வெட்டுவேன்… என்று ‘சவுண்டு’ விட்ட ‘நாம் தமிழர்’ தம்பி கைது!

Published:

facebook complaint2 horz - 2026

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் ஊக்கம் பெற்ற ‘தம்பி’ கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கருத்தப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் சார்லஸ். 31 வயதாகும் இவர், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியில் உள்ளார்!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இவர் பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் பிரதமர் மோடியின் இரண்டு கைகளையும் வெட்டுவேன் ஒரு காலை விடுவேன் என பதிவு செய்திருந்தார்!

இதுகுறித்து அம்பாசமுத்திரம் நகர பாஜக தலைவர் ஹரிராம் போலீசில் புகார் அளித்தார்! போலீசார் திருப்பூரில் இருந்த சார்லசை நேற்று கைது செய்தனர்!

மோடியை வெட்டுவேன் என்று முகநூலில் வெளிப்படையாக சித்திரிக்கும் அளவுக்கு நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் சீமானின் பேச்சால் வெகுவாக ஈர்க்கப் பட்ட வர்,  திருநெல்வேலி மாவட்டம் கருத்தப்பிள்ளையூரைச் சேர்ந்த   சார்ல்ஸ்!  இவர் மீது அம்பாசமுத்திரத்தில் Cr. No 228/2019 u/s 504, 506 (ii) IPC and 67 IT Act இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு தொடுக்க பட்டுள்ளது…!

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

facebook complaint fir1 - 2026 facebook complaint fir2 - 2026 facebook complaint fir3 - 2026

Related articles

Recent articles

spot_img