புலியை சுற்றி வளைத்து அடிஅடியென அடித்துக் கொன்ற கிராமமக்கள் !

சற்றுமுன்

tiger 2 - 2026உத்திர பிரதேச மாநிலம், பில்பித் மாவட்டத்தில், டியுரியா பகுதியில், காட்டிலிருந்து விவசாய நிலத்திற்குள்  பெண் புலிப் புகுந்தது. அதனைக் கண்ட அவ்வூர் மக்கள் புலியைத் தடியால் அடித்தே கொன்றனர்.

இந்த பதைபதைக்கவைக்கும் சம்பவத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவைக் குறித்து பலர், மனித தன்மையற்ற செயல் என்றும், அப்பாவி விலங்கினை அடித்தே கொல்வதை ஒரு போதும் ஏற்கமுடியாது எனவும் இது மிருக் வதை என்றும், புலி இனமே அழிந்து வரும் சூழலில் இவ்வாறு செய்வது கண்டிக்கத்தக்கது எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.