லேசான நிலநடுக்கத்தால் அதிர்ந்த சேலம் ! அச்சத்தில் மக்கள் !

தமிழகம்

earthquake - 2026சேலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கடையம்பட்டி பகுதிகளில் இன்று காலை 8.34 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 வினாடிகள் நீடித்தது  நிலநடுக்கம். அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும், கட்டடங்களும் அதிர்ந்தன.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பியதால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.