பேராசிரியர் ஸ்டாலின் சொல்கிறார்… ஆகவே மாணவர்களே ரோடர் என்பது…. ரோடர் என்பது ரோடர்… என்பது… ரோடர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இதை முழுவதுமாக நீங்கள் கேட்டே ஆக வேண்டும்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் தே
பிரச்சாரத்தின் போது சில இடங்களில் தப்பும் தவறுமாக அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பா
பாகிஸ்தான்மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்து பேசிய ஸ்டாலின், மோடி வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக பேசினார்.
வேலூரில் வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று ஸ்டாலின் கருதிக் கொண்டு இந்தியா தொடுத்த தாக்குதலை மோசமாக விமர்சித்தார்.
பிரதமர்மோடி குறித்து ஒருமையிலும் மோசமாகவும் பேசிய ஸ்டாலின் ரேடார் என்பதை ரோடர் என்று கூறியிருந்தார்
அது மட்டுமின்றி ரேடார் வழியாக பாகிஸ்தானுக்கு உள் இந்தியா புகுந்து விடலாம் என்று பகுத்தறிவுக்கு அல்ல… சாதாரண அறிவுக்குக் கூட ஒவ்வாத வகையில் முட்டாள்தனமாக உளறியதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இஸ்லாமிய வாக்குகளை பெறுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்த பிரிவினைவாத முயற்சி குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
எவ்வளவு கல்லூரி இருக்குது … இவர்கள் தொடங்கிய கல்லூரிகளில் நிறைய இருக்கின்றன இவர்களது கல்லூரிகளில் அதிகம் உள்ளனவே ஜகத் ரட்சகன் தொடங்கி பாலு இத்தியாதி… அங்கெல்லாம் இவரை பேராசிரியராப் போடலாமே என்று ஸ்டாலின் குறித்து அங்கலாய்க்கின்றனர்.
தான் படிக்காவிட்டாலும் தமிழகத்தின் குழந்தைகள் படிக்க வேண்டும் எதிர்கால மாணவர்கள் புத்திசாலிகள் ஆகவேண்டும் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மாணவன் கூட பள்ளிக்கல்வி யாவது முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காமராஜர் வாழ்ந்த தமிழ் மண்ணில்தான் இப்படிப்பட்ட எதிர்கால சிந்தனை சிறிதும் அற்ற மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை துளியும் இல்லாத மாணவர்களின் உயர்கல்வியை எல்கேஜி தரத்துக்கு மோசமாக்கி வைத்திருக்கின்ற ஸ்டாலின் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்று ஆதங்கப்படுகின்றனர் பலரும்!




