மாலத்தீவு முன்னாள் அதிபரை அந்நாட்டிடம் ஒப்படைக்க இந்தியா திட்டம்!

இந்தியா உலகம் சற்றுமுன்

akamad ahip 1 - 2026

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதிப்பை, அந்த நாட்டிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய கடல் எல்லையில், மாலத்தீவு அதிகாரிகளிடம் கடலோர காவல்படை ஒப்படைக்கிறது.

விசாரணைக்குப் பின்னர் சர்வதேச சட்டப்படி, மாலத்தீவிடம் ஒப்படைக்கப்படுகிறார் அகமது ஆதிப்.

சரக்கு கப்பலின் ரகசிய அறையில் தங்கி, தப்பி தூத்துக்குடி வந்த அகமதுவிடம் இந்திய அதிகாரிகள் 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதிப் மீது பணம் கையாடல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

வேறுநாடு செல்ல தடை உள்ளபோது அவர் இந்தியாவிற்கு தப்பி சென்றதால் அவர் மீது குற்றந எடுக்கப்படும் என்று- மாலத்தீவு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.