என்ன நடக்கிறது தெரியவில்லை?! காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் கருத்து!

Published:

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. தேசிய ஊடகங்களில் இதுகுறித்த கிசு கிசுக்கள் அதிகம் உலா வருகின்றன.

ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டம் என தகவல் வெளியானது.

இதனை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது குறித்து அதிகம் விவாதங்கள் எழுந்து வருகின்றன பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு என்பது வழக்கமான ஒன்று என்றும் பாகிஸ்தான் தொடர்பிலான பயங்கரவாதிகளை கொடுக்கும் நடவடிக்கை என்றும் தாக்குதலை முறியடிக்க இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது தான் என்றும் மாநில அரசு கூறி வருகிறது மேலும் ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இந்நிலையில் தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.  அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்டது.

மேலும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப் பட்டது.

அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு படைகள் குவிப்பு ஆகியவற்றாலும் அமர்நாத் யாத்திரைக்கு ஏற்பட்டுள்ள தடையின் காரணத்தாலும் காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு நிலவி வருகிறது

இதனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்று காஷ்மீர் மாநில அரசியல் கட்சியினர் மற்றும் பயங்கரவாத இயக்கங்களுடனான தொடர்பில் உள்ள அடிப்படைவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன

இந்த நிலையில்தான் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் பகுதியை union territory அந்தஸ்துடனும் யூனியன் பிரதேசங்கள் என்ற அந்தஸ்துடனும் ஜம்முவை மாநிலமாக மாற்றுவதாகவும் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

இதனால் அச்சமடைந்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு இது போன்று அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறது நேற்று இதுகுறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என அம்மாநில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவுகளின் இதனை வெளிப்படுத்தி வருகிறார்

#Kashmir | #CentralGovt

Related articles

Recent articles

spot_img