மாஸ்டரை காண தியேட்டருக்கு வருவார்களா? – கலக்கத்தில் விஜய் எடுத்த முடிவு

Published:

master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. அதன் பின் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியானது. ஆனால், தியேட்டரில்தான் மாஸ்டர் ரிலீஸ் என்பதில் விஜய் உறுதியாக இருக்க, தற்போது பொங்கல் பண்டிகையின் போது தியேட்டரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் பல மாதங்களாக தியேட்டர்களை மறந்துவிட்ட ரசிகர்கள் மாஸ்டரை பார்க்க தியேட்டர்களுக்கு வருவார்களா என்கிற அச்சமும் விஜய்க்கு இருக்கிறதாம். எனவே, அவர்களை வரவழைக்க தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பது, தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்திப்பது என அவர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img