ரஜினிக்கு பிறந்தநாள்… உருவானது காமன் பிடி.. அதிரும் இணையதளம்

Published:

rajini

பல வருட தாமதம் மற்றும் தயக்கத்திற்கு பின் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். டிச 31ம் தேதி கட்சி பற்றிய செய்தியை அறிவிப்பேன் எனவும், ஜனவரியில் கட்சி துவக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. எனவே, அதற்கு ரஜினி தயாராகி வருகிறார்.

நாளை ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். எனவே, அதை சிறப்பாக கொண்டாட ரஜினி ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் பயன்படுத்துவதற்காக காமன் டிபியை வெளியிட்டுள்ளார். மேலும் ‘மிகப்பெரிய உத்வேகம் மற்றும் மனித நேயத்தின் எழுச்சி! எங்கள் அன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாள் சிடிபி வெளியிடுவதில் மிகவும் பெருமை அடைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக நடிகர்களின் பிறந்தநாளின் போது அவர்களின் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் புரைபைல் பிக்சராக காமன் டிபிஐ வைப்பது அதிகரித்து வருகிறது.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

rajini

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img