விஷவாயு: இதய துடிப்பை நிறுத்திய நிகழ்வு: மகேஷ் பாபு ட்விட்!

சினி நியூஸ் சினிமா

தற்போதுள்ள இக்கட்டான சூழலில் விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து பற்றிய செய்தி இதயத்தை துடிப்பை நிறுத்துவது போல் இருக்கிறது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொருளாதார சரிவால் பல கம்பெனிகள் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன.

இந்த சூழலில் நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி இருக்கிறது.

4859dba0c33b194794f854c27804ef72 - 2026

இதுகுறித்து டுவீட் செய்துள்ள தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, “தற்போதுள்ள இக்கட்டான சூழலில் விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து பற்றிய செய்தி இதயத்தை துடிப்பை நிறுத்துவது போல் இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்கள் மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டுகிறேன். உங்களுக்காக பிராத்திக்கிறேன். விசாகப்பட்டிணம் பாதுகாப்பாக இருக்கட்டும்”, என அவர் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.