sbi
sbi

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு அறிவித்ததுடன், மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரித்து அசத்தியுள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் வகையில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியது. குறைந்து வரும் வட்டி விகித்திலிருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் வகையில் ‘எஸ்பிஐ வீகோ் டெபாசிட்’ என்ற பெயரில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்வதாக எஸ்பிஐ கூறியுள்ளது.

எஸ்பிஐ.,யின் இந்த அறிவிப்பின் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டம் செப்டம்பா் 30 வரை அமலில் இருக்கும். ஆனால், 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மே 12-ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளது.

SBI bank atm
SBI bank atm

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது எம்.சி.எல்.ஆர் விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர் 2020 மே 10 முதல், நடைமுறைக்கு வரும்.

ஆண்டுக்கு 7.40 %-இருந்து 7.25 % ஆக எம்.சி.எல்.ஆர் விகிதம், குறைக்கப்படும். இது எஸ்பிஐ வங்கியின் தொடர்ச்சியான 12வது எம்.சி.எல்.ஆர் குறைப்பு.
எம்.சி.எல்.ஆர் குறைப்புக்குப் பிறகு, தகுதி வாய்ந்த வீட்டுக் கடன் கணக்குகளின் (எம்.சி.எல்.ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது) 30 ஆண்டுகள் செலுத்தும் காலத்தைக் கொண்ட ரூ. 25 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை ரூ.255 வரை குறையும் என்றும், எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

உங்கள் வீட்டுக் கடன் எஸ்பிஐ.,யின் எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தால் நீங்கள் இதனைக் கவனிக்க வேண்டும். எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்கள் பொதுவாக ஒரு வருட மீட்டு விதிமுறைகளைக் கொண்டிருப்பதால், இந்த விகித குறைப்பானது உங்கள் ஈஎம்ஐக்களை உடனடியாகக் குறைக்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending