குடிமகன்களுக்கு ஒரு குட் நியூஸ்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
liquor - 2026

குடிமகன்களுக்கு குட் நியூஸ்… 5 நாட்களுக்கு திறந்து வைக்கப் போகும் மதுக்கடைகள்.

லாக்டௌனில் மது விற்பனையை அரசாங்கங்கள் தடை விதித்துள்ளதால் குடிகாரர்கள் அவஸ்தையில் உள்ளார்கள். அதனால் ஒரேடியாக மனநல மருத்துவமனையில் சேருவதற்கு கூட குடிமகன்கள் கியூவில் நிற்கிறார்கள். மறுபுறம் மதுவுக்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து பிளாக்கில் வாங்கி குடிக்கும் சூழலும் நிலவுகிறது.

இந்த பின்னணியில் மேகாலயா அரசாங்கம் ஒரு முக்கியமான தீர்மானம் எடுத்துள்ளது.

திங்கட்கிழமை ஏப்ரல் 13 லிருந்து வெள்ளிக்கிழமை ஏப்ரல் 17 வரை மாநிலத்தில் மதுக்கடைகளை திறக்க போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆறு நாட்களும் காலை 9லிருந்து மாலை 4 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று மேகாலயா அரசாங்கம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதோடு கூட சில ஷரத்துக்களையும் விதித்துள்ளது. மதுக்கடைகளின் அருகில் சோஷல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அவரவர் கிராமத்திலேயே அவரவர் மது வாங்க வேண்டும் என்றும் வேறு கிராமங்களுக்கு செல்லக் கூடாது என்றும் விதித்துள்ளது.

இந்த மாநிலத்தில் இதுவரை ஒரு கொரோனா கேசு கூட பதிவாகவில்லை என்பதால் லாக்டௌனை ஓரளவிற்கு தளர்த்தி உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.