புத்தாண்டு பெயர் மாற்றம்! ஆரி இனி ஆரி அர்ஜுனாவாம்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
aari arjuna1 - 2026

நடிகர் ஆரி இனி தன் பெயரை ஆரி அர்ஜுனா என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை  பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன். 
இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன்.

எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த புத்தாண்டில் உங்கள்  கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.