
ரஜினிகாந்த், கமலஹாசன்,எந்த ஒரு நடிகர் வந்தாலும் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது; எங்களை அசைக்க முடியாது என்று மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் 2011 சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ,சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆ ராசாவின் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் தயார்.கேடுகெட்ட அரசியல் வாதியாக ஆ.ராசா செயல்பட்டு வருகிறார்.
திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டனை நாய் என்று அவதூறாக பேசினார். கேடுகெட்ட அரசியல்வாதிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கமலஹாசன் குறித்த கேள்விக்கு? ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் ஓட்டு கேட்டு வரலாம்.கமலஹாசன் வந்தால் கூட்டம் கூடும் போட்டு வருமா என்பதுதான் கேள்வி.
தேமுதிக கட்சியின் திறமையை காண்பிப்பதற்காக பிரேமலதா விஜயகாந்த் பேசுகிறார்.கேடுகெட்ட அரசியல்வாதி ஆ.ராசா. இறந்த அரசியல் தலைவர்களை நாலாந்தர பேச்சாளர் போல ஒரு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பேசி வருகிறார்கள் என்றால் அவருடைய தகுதியை பாருங்கள்.அதிமுக ஒரு திறந்த புத்தகம் பத்தாண்டுகளில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து வருகிறோம்.
1996இல் ரஜினிகாந்த் அம்மாவிற்கு எதிராக குரல் கொடுத்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தான் மிகப்பெரிய பாதிப்பு.
ரஜினிகாந்த், கமலஹாசன்,எந்த ஒரு நடிகர் வந்தாலும் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. அசைக்க முடியாது.தமிழகத்தில் எடப்பாடியார் அலை உருவாகி இருக்கிறது.
[ஸ்டாலினை பொருத்தவரை எப்படியாவது முதல்வர் ஆக ஆக வேண்டும் என்று பேசி வருகிறார்.அவர்கள் ஆட்சி காலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட போது நிவாரணம் எப்படி கொடுத்தார் என்று அனைவருக்கும் தெரியும்.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு முதல்வர் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறினார்.