உடல் எடை கூட்டும் அரிசி பருப்பு புலாவ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Rice-lentil-pulao
Rice-lentil-pulao

அரிசி பருப்பு புலாவ்

தேவையான பொருட்கள்

அரிசி. -. 1_1/2 கப்
துவரம்பருப்பு. -1/4கப்
கடலைப்பருப்பு. – 1/4கப்
பச்சை பயறு. -1/4கப்
பட்டாணி. -1/4கப்
தட்டபயிறு. -1/4கப்
பட்டர் பீன்ஸ். 1/4கப்
கேரட். – 2
பீன்ஸ். ‌. -15
வெங்காயம். -2
தக்காளி. -6
பச்சை மிளகாய். -8
இஞ்சி நறுக்கியது. -2டேபிள்ஸ்பூன்
பூண்டு நறுக்கியது. -2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை. -சிறிது
கொத்தமல்லி தழை. -சிறிது
உப்பு. -தேவையான அளவு
மஞ்சள் தூள். -1ஸ்பூன்
பட்டை. -1ஸ்பூன்
கிராம்பு. -2
ஏலக்காய். -2
பிரியாணி இலை. _2
அன்னாச்சி பூ. -2
சோம்பு. -1/2ஸ்பூன்
கடுகு. -1ஸ்பூன்
எண்ணெய். -8டேபிள்ஸ்பூன்
நெய். -4டேபிள்ஸ்பூன்
முந்திரிஅலங்கரிக்க -சிறிது
செய்முறை
தட்டபயிறு,பட்டாணி,மற்றும் பட்டர் பீன்ஸ்,ஆகியவற்றை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும்

அரிசி மற்றும் கடலைப்பருப்பு,துவரம்பருப்பு, பச்சை பயறு,ஆகியவற்றை தனித்தனியாக சமைப்பதற்கு முக்கால் மணி நேரம் முன்பு ஊறவிடவும்

காய்கறிகள்,மற்றும் வெங்காயம், தக்காளி,இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய், ஆகியவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கி வைக்கவும்

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வெடிக்க விடவும்
பின் சோம்பு கடுகு சேர்த்து வெடிக்க விடவும் பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்கு கரைய வதக்கவும் தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்

பின் ஊறவைத்த பருப்பு மற்றும் பயறு வகைகளை சேர்க்கவும் பின் நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். பின் ஊறவைத்த அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும்

பின் கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி வைக்கவும்
இரண்டு விசில் வந்ததும் தீயை குறைத்து ஐந்து நிமிடம் வரை வைத்து பின் இறக்கவும் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை மெதுவாக கிளறி சூடாக பரிமாறவும்

குறிப்புகள்: பருப்பு வகைகளை அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் வரை ஊறவிடவும்.
பயறு வகைகளை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும். சுவையான ஆரோக்கியமான அரிசி பருப்பு சாதம் தயார். நெய்யில் வறுத்த முந்திரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.