
தங்களுக்குள் காங்கிரஸ் கட்சிக்காரர்களும், வெளிப்படையாக ஒட்டுமொத்த இந்தியாவும் கேலி செய்து காறித்துப்பி விட்ட ஒரு அரசியல் கோமாளியை, ஏதோ ஒரு cool நாயகன் ரேஞ்சுக்கு தமிழ்நாட்டில் “உலா” வரச்செய்து கொண்டிருக்கிறது திமுக-காங். கூட்டணி.
கிறிஸ்துவ பாதிரி கும்பல்களும், நிர்ப்பந்திக்கப்பட்ட கிறிஸ்தவ கல்லூரி மாணவிகளும் “ராகுல் ராகுல்” என்று கத்தி (கதறி?) குத்தாட்டம் போட்டு ஆகா ஓகோ என்று இந்த முட்டாப்பயலை விளம்பரம் செய்யும் காட்சிகளின் தரம் ஸ்டாலின் உளறல்களுக்கும் ஒரு படி கீழே உள்ளது.
இது ஒன்றே போதும், குறைந்தபட்ச அறிவுத்திறன் கொண்ட தமிழர்கள் அனைவரும் ஏன் இந்த நாசகார கூட்டணியை நிராகரிக்க வேண்டும் என்பதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை.
தேசம் போற்றும், உலகமே வியந்து பாராட்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களை தமிழ்நாட்டின் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் எதிரியாக பாவிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. என்றைக்கு அவர்கள் பாரதத்தின் நலனைப் பற்றி யோசித்திருக்கிறார்கள்?
ராகுல், ஸ்டாலின் என்றல்ல, மோதிக்கு எதிர் என்ற ஒரே காரணத்திற்காக எந்தக் கேனையனையும் தலைவன் என்று கோஷம் போடும் நிலைக்கு அவர்களின் மத மூளைச்சலவை அவர்களைத் தள்ளியிருக்கிறது.
ஆனால், இத்தகைய எந்த மதவெறி இருளுக்கும் ஆட்படாத சராசரித் தமிழனின் மனதிலும் ஸ்டாலின், ராகுல் போன்ற எந்தத் தகுதியுமில்லாத அரசியல் பூஜ்யங்களின் மீது ஒரு மதிப்பும், ஏற்பும் உண்டாகும்படியான பொய்ப் பிரசாரங்களை, இந்த கும்பல்கள் தங்கள் பணபலத்தாலும் ஊடக பலத்தாலும் செய்து கொண்டிருக்கிறனர்.
சுயசிந்தனை கொண்ட தமிழர்களே, தமிழ் இந்துக்களே, எச்சரிக்கை. குறுகியகால அரசியல் லாபங்களுக்காக இந்த திமுக கொத்தடிமைக் கூட்டத்தின் மாயவலையில் விழாதீர்கள். இவர்கள் கையில் மாநில அரசு அதிகாரம் கிடைத்தால் தமிழ்நாட்டை எந்தவகையான சீரழிவுக்கு இட்டுச் செல்வார்கள் என்பதற்கான தடயங்கள் இப்போதே தெரிகின்றன.
திமுக-காங். கூட்டணியை கடும் தோல்வியடையச் செய்வதே நீங்கள் உங்களுக்கும் உங்களது சந்ததியினருக்கும் செய்யும் நல்ல உபகாரமாகவும், தார்மீகக் கடமையாகவும் இருக்கும்.
சிறந்த முறையில் நல்லாட்சியையும் சமூக அமைதியையும் பேணி வரும் தலைவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
- ஜடாயு (Jataayu B’luru)