kambu thattai
kambu thattai

கம்பு தட்டை
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 1/2 கிலோ,
உடைத்த கடலை – 75 கிராம்,
நிலக்கடலை – 75 கிராம்,
வெங்காயம் – 300 கிராம்,
சீரகம் – 4 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – தேவையான அளவு,
பெருங்காயம் – சிறிது,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவைக்கு.

செய்முறை

கம்பு மாவில் சிறிது வெந்நீர் ஊற்றி நன்கு பிசறிக் கொள்ளவும். இத்துடன் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உடைத்த கடலை, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இறுதியில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கையில் வைத்து தட்டும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காயவைத்து மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending