Pineapple Fruit Upside Down Cake
Pineapple Fruit Upside Down Cake

அன்னாசி பழ அப்ஸைட் டவுன் கேக்
தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் வெண்ணெய்
1/3 கப் சிவப்பு சக்கரை
2முந்திரி
1/4 கப் தண்ணீர்
2அன்னாசி பழத் துண்டு
கேக் பேட்டர் செய்ய
1 கப் மைதா
1/4 கப் சக்கரை பவுடர்
1/2 கப் பால்
3 ஸ்பூன் வெண்ணெய்
1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1/2 ஸ்பூன் குக்கிங் சோடா
1/2 கப் அண்ணாசி சாறு
1 சிட்டிகை உப்பு

செய்முறை

வெண்ணெயுடன் சிவப்பு சக்கரை சேர்த்து தண்ணீர் விட்டு 3 முதல் 5 நிமிடங்கள் வரை கிண்டவும்

கேக் டின்னில் ஊற்றி 2 அன்னாசி பழத்துண்டுகள் முந்திரி வைக்கவும். அன்னாசியை மிக்ஸியில் அரைத்து, பால் எலுமிச்சை சாறு கலந்து தனியே வைக்கவும்

சக்கரை பவுடர், குக்கிங் சோடா, உப்பு மைதா ஆகியவை சலித்து, வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள அன்னாசி சாறு வடிகட்டி மாவில் சேர்க்கவும்

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

சிறிதளவு தண்ணீர் விட்டு பேட்டர் பதம் சரி செய்து டாப்பிங்ஸ் உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும். குக்கரை 5 நிமிடங்கள் முன் வெப்பமாக்கி, கல் உப்பு நிரப்பி, ஸ்டாண்ட் வைத்து கேக் பேட்டரை(மாவு) வைக்கவும்

கேஸ்கெட் விசில் இல்லாமல் மூடி மிதமான தீயில் 30-35 நிமிடங்கள் வைக்கவும்
35 நிமிடங்கள் ஈர குச்சியை வைத்து வெந்துள்ளதா என்று பார்க்க வேண்டும் தேவைப்பட்டால் மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும். 10 நிமிடங்கள் ஆற விட்டு, ஓரத்தில் சுற்றி எடுத்து விட்டு தட்டில் கவிழ்க்கவும் சுவையான அன்னாசி கேக் தயார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending