ஆரோக்கிய சமையல்: சாமைப் பொங்கல்!

Published:

samai ponkal
samai ponkal

சாமைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 50 கிராம்,
சாமை அரிசி – 200 கிராம்,
மிளகு – 10
சீரகம் – ஒரு டீஸ்பூன் (மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்), நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பருப்பு – 10 கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து லேசாகச் சூடு வரும்வரை வறுக்கவும். இவற்றுடன் ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு என்கிற அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
வாணலியில் சிறிதளவு நெய்யைச் சூடாக்கி அதில் மிளகு, சீரகத்தைச் சேர்த்து வறுக்கவும். பிறகு இஞ்சியையும் சேர்த்து வதக்கவும். இதை வேகவைத்த பொங்கல் கலவையில் சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, உப்பு, வறுத்த முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மீதமுள்ள நெய்விட்டுக் கலந்து சுடச்சுடப் பரிமாறவும்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

குறிப்பு: அரிசிக்குப் பதிலாக இப்படி சிறுதானியங்களைப் பயன்படுத்தி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Related articles

Recent articles

spot_img