
வெள்ளரி – புடலை மிக்ஸ்
தேவையானவை:
துண்டுகளாக நறுக்கிய வெள்ளரி, புடலங்காய் (சேர்த்து) – ஒரு கப், பொட்டுக்கடலைப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
சிறிய பச்சை மிளகாய் – 3,
சீரகம் – கால் டீஸ்பூன்,
தயிர் – ஒரு கப்,
தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்து தயிருடன் கலக்கவும். வெள்ளரி, புடலங்காயை நறுக்கி, தேங்காய் எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்க்கவும். இதை தேங்காய் – தயிர் விழுதில் சேர்த்து, மேலே பொட்டுக்கடலைப் பொடி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.