குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): மீனம்

Published:

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : mannargudirs1960@hotmail.com


12 meenam

மீனம்
பூரட்டாதி 4ம் பாதம்
உத்திரட்டாதி 4 பாதம்
ரேவதி 4 பாதம் முடிய


மீன ராசி அன்பர்களே மிகச் சாதகமான குருபெயர்ச்சி உங்களுடையது உங்கள் ராசிநாதன் குரு 12ல் சஞ்சரிக்கிறார் சுப செலவுகள் மற்றும் பலவித நன்மைகளை செய்கிறார் மேலும் சனி புதன் சூரியன் செவ்வாய் சுக்கிரன் என்று அனைத்து கிரகங்களும் சாதகமான நிலையில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் எண்ணங்கள் உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாகவும் திருப்திகரமாக நிறைவேறும்

நீங்கள் இதுவரை முயற்சித்த விஷயங்களில் இனி அதிக நன்மை எதிர்பார்க்கலாம் அதேபோல் பொருளாதார ரீதியாக இரட்டிப்பு வருமானம் வந்து உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் சனிபகவான் லாபத்தில் ஆட்சியிலிருந்து உங்கள் ராசியை பார்த்து உங்களது வருகிறார் அவர் பலமாகவும் இருக்கிறார் அதேபோல இருக்கும் அவரால் நன்மை உண்டாகிறது

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.21 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை கலைத்துறையில் உள்ளவர்கள் செய்வார்கள் மற்றும் புதன் நிதானத்தையும் புத்திக் கூர்மையையும் தருவதால் சூரியன் லாபத்தில் வரும்போது நன்மை செய்வதால் ஜீவன வகையில் முன்னேற்றம் ஏற்படும் அதனால் வீடு வாகன யோகங்கள் என்று அனைத்தும் உண்டாகும் மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனைத்து பிரிவினரும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள் விரும்பிய இட மாற்றம் அல்லது புதிய வேலை சிலருக்கு அரசாங்க வேலை சிலருக்கு வெளிநாட்டு வேலை என்று கிடைத்து மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்

அதேபோல சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய தொழில் விஸ்தரிப்பு வங்கி கடன் வியாபாரப் பெருக்கம் என்று சிறப்பாக இருக்கும் பொதுவில் பொருளாதாரம் நன்றாக இருப்பதால் மற்ற அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும் சிலருக்கு வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும் 

திருமணம் குழந்தை பாக்கியம் என்று இல்லத்தில் வரிசையாக விசேஷங்கள் நடக்கும் உறவுகளின் நெருக்கம் கூடிவரும் அவர்களால் பல நன்மைகள் உண்டாகும் பொதுவில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான ஒன்றாக அமையும்

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை நிறைந்து காணப்படும் ஒருவரை ஒருவர் அனுசரித்து புரிந்துகொண்டு நடப்பர் இல்லத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் பெற்றோர்கள் மூலம் சொத்துக்கள் கிடைக்கலாம் அல்லது வருமானம் பெருக வழி உண்டாகலாம் புதிய வீடு சிலருக்கு அமையும் கடந்தகால தாமதமான முயற்சிகள் இப்பொழுது நடப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும் சகோதர வகையில் நன்மைகள் அதிகரிக்கும் பரஸ்பரம் அன்பு காட்டி மகிழ்ச்சியான குடும்பமாக அமையும்

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஆரோக்கியம்: பொதுவில் மகிழ்ச்சி அதிகம் இருப்பதாலும் மார்ச் 2022 முதல் ராகு இரண்டில் வரும்போது வியாதிகள் இல்லாமல் இருக்கும் அல்லது வைத்தியச் செலவுகள் குறையும் மனதில் நிம்மதி இருக்கும் பெரிய வைத்திய செலவுகள் இருக்காது குடும்ப அங்கத்தினர்கள் வகையிலும் வைத்திய செலவுகள் இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும் எல்லோருக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கிரகங்கள் சாதகமாக இருப்பதால் ஆரோக்கிய பிரச்சனைகள் வராது

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : உங்கள் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வம் வழிபாடு மிகச் சிறந்த ஒன்று அருகிலுள்ள கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் மேலும் இந்த குருபெயர்ச்சி மிக அதிக அளவில் உங்களுக்கு நன்மை தருவதால் முடிந்த அளவு தான தருமங்களைச் செய்யுங்கள் அதிகமாக அன்னதானம் செய்யுங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்

Related articles

Recent articles

spot_img