Mango Coconut Spicy Rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மாங்காய் தேங்காய் மசாலா சாதம்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
Mango Coconut Spicy Rice - 2026

மாங்காய் தேங்காய் மசாலா சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – 1/4 கிலோ,
மாங்காய் – 1,
தேங்காய் – 1 மூடி,
காய்ந்த மிளகாய் – 6,
பச்சை மிளகாய் – 1,
கடலை பருப்பு – 3 + 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 3 + 1 டீஸ்பூன்,
நிலக்கடலை – 2 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
எள் – 2 டீஸ்பூன்,
பட்டை – சிறிது,
கிராம்பு – 2,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்.

செய்முறை
சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து, ஆற விடவும்.
மாங்காய், தேங்காயை துருவி வைக்கவும்.
காய்ந்த மிளகாய், தனியா, 3 ஸ்பூன் கடலைப்பருப்பு, 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, வெந்தயம் வறுத்து எடுத்து பொடித்து வைக்கவும்.
எள்ளைத் தனியாக படபடவென பொரியும் வரை வறுத்து எடுத்து பொடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பச்சை மிளகாய், மீதி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை சேர்த்து, சிவந்ததும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
துருவிய மாங்காய், தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின், ஆறிய சாதத்துடன் கலக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.