health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: சொத்தைப்பல், வாய்ப்புண், உதடு வெடிப்பு, காதுவலி, சூடு பட்ட புண்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

அதிக சத்துள்ள பழம்

வாழைப்பழத்தில் உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டிய கால்சியம், ஃபாஸ்பரஸ், கந்தகம், இரும்புச் சத்து, வைட்டமின் ‘ஏ’ ‘பி’, ‘சி’ அனைத்தும் அதிக அளவில் உள்ளது.

வெந்நீரில் ஏற்படும் புண்களுக்கு…

காசித்தும்பைச் சாற்றை வெந்நீரில் ஏற்பட்ட கொப்புளங்களின் மேல் தடவி வர நல்ல குணம் காணலாம்.

காது வலிக்கு…

ஊமத்தம் பூவை கசக்கி சாறெடுத்து இரண்டு சொட்டுக்கள் காதில் விட காது வலி குணமாகும்.

சொத்தைப் பல்லா?

துளசி சாற்றில் சிறிது கற்பூரம். சிறிது கிராம்புத் தூள் கலந்து சொத்தைப் பல்லின் மேல் தடவினால் வலி குறையும். ஈறு வீக்கம் போகும்.

உதட்டில் வெடிப்பா?

உதட்டில் வெடிப்பு, வாயில் புண் இருந்தால் பாக்கு மரத்தின் வேரை இடித்து கஷாயம் போட்டு சாப்பிடலாம். இந்த கஷாயத்தைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். உதடு வெடிப்பு நீங்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.