குமரி மீனவர்களை காப்பாற்ற கோரி சென்னையில் மீனவர்கள் போராட்டம்!

சற்றுமுன்

குமரி மீனவர்களை போர்க்கால அடிப்படையில் காப்பாற்ற கோரியும் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கும் மீனவ குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும்
சென்னை கலங்கரை விளக்கம் அருகே நொச்சிக்குப்பம் உள்பட 25 மீனவ கிராம மக்கள் திரண்டு இன்றுகாலை கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்களுக்கும் போலீசாருக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

பின்னர் அனைவரையும் அரசு பேருந்துகள் மற்றும் வேன் களில் ஏற்றிய போலீசார் கோட்டைக்கு சற்று முன்பாக சேப்பாக்கத்தில் (அரசு விருந்தினர் மாளிகை அருகே) இறக்கி விட்டனர்.

அங்கு மீனவ மக்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இப்போராட்டத்தை தொடர்ந்து, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கோட்டைக்கு சென்று பாதிக்கப் பட்ட
மீனம மக்களின் குமுறல்களை மனுமூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.