பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

Published:

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து 2ஆவது நாளாக உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 135 கன அடியாக பராமரிக்க உத்தரவிட்டதையடுத்து அணையிலிருந்து 207 8.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து மயிலாறு பகுதியில் குடியிருக்கும் 60 காணியின குடும்பத்தினர் 2 ஆவது நாளாக பாதையின்றி தவிக்கின்றனர்.

அணையின் முழுக் கொள்ளளவை எட்டும் முன் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது அருவியில் நீர் வரத்த்து குறைந்தையடுத்து அந்த தடை விலக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-12-2017)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 137.15 அடி
நீர் வரத்து : 676.08 கன அடி
வெளியேற்றம் :320 கனஅடி

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 138.32 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 111.65 அடி
நீர் வரத்து : 408 கன அடி
வெளியேற்றம்: Nil

மழை அளவு:
பாபநாசம்:
4 மி.மீ
கடனா:
1 மி.மீ
ராமா நதி:
10 மி.மீ
கருப்பா நதி:
192 மி.மீ
குண்டாறு:
47 மி.மீ
அடவிநயினர்:
20 மி.மீ
ஆய்குடி:
36 மி.மீ
சேரன்மகாதேவி:
7 மி.மீ
சங்கரன்கோவில்:
11 மி.மீ
செங்கோட்டை:
41 மி.மீ
சிவகிரி:
21 மி.மீ
தென்காசி:
36.20 மி.மீ

Related articles

Recent articles

spot_img