கடன் விகிதம்.. உயர்வு.. அதிர்ச்சி தந்த SBI!

sbi - 2026

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அனைத்து கால வரம்புகளுக்கான கடன் வழங்குவதற்கான இறுதிநிலைச் செலவு(எம்சிஎல்ஆர்) விகித்ததை 10 புள்ளிகள் அதாவது 0.1% உயர்த்தியுள்ளது.

இதனால் வங்கியில் கடன் பெற்றிருப்பவர்களின் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணம் இனிவரும் மாதங்களில் உயரக்கூடும்.

எஸ்பிஐ வங்கி உயர்த்திவிட்ட நிலையில் அதைத் தொடர்ந்து அனைத்து பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் உயர்த்தக்கூடும்.

எம்சிஎல்ஆர் அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான கடன் வழங்கும் முறை என்பது கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் முறை. இது ரிசர்வ் வங்கியால் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குபின் வழங்கப்படும் அனைத்து கடன்களும் எம்சிஎல்ஆர் படி இருக்கும்

எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இஎம்ஐ கட்டணம் உயரும், மற்ற பெஞ்ச்மார்க் அடிப்படையில் வாங்கியவர்களுக்கு உயராது.

எஸ்பிஐ வங்கியின் இபிஎல்ஆர் விகிதம் 6.65 சதவீதமாகவும், ரெப்போ அடிப்படையிலான கடன்விகிதம்(ஆர்எல்எல்ஆர்) 6.25 சதவீதமாகவும் கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து வருகிறது

வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடனை தனிநபர் ஒருவருக்கு வங்கிகள் வழங்கும்போது, இபிஎல்ஆர், ஆர்எல்எல்ஆர் ஆகியவற்றுக்கு கூடுதலாக கிரெடிட் ரிஸ்க் ப்ரீமியம் அடிப்படையில் கடன் வழங்கும்.

இதன்படி திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் கடந்த 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி இதற்கு முன் 7 சதவீதமாக இருந்த எம்சிஎல்ஆர் ரேட் இனிமேல் 7.10சதவீதமாக அதிகரிக்கும்.

ஒருமாதம் மற்றும் 3 மாத எம்சிஎல்ஆர் 10 புள்ளிகள் அதிகரித்து 6.75 சதவீதமும், 6 மாதத்துக்கான எம்சிஎல்ஆர் ரேட் 7.05 சதவீதமும் அதிகரிக்கும். ஆனால், பெரும்பாலும் ஒர் ஆண்டு கடனில்தான் எம்சிஎல்ஆர் ரேட் இருக்கும்.

2 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் ரேட் 0.1 சதவீதம் அதிகரித்து 7.30 சதவீதமும், 3 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் 7.40 சதவீதமும் அதிகரிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories