Oppo F21 - 2026

Oppo F21: சிறப்பம்சங்கள்..!

லைஃப் ஸ்டைல் தமிழகம் வணிகம்
Oppo F21 - 2026

ஓப்போ நிறுவனம் அதன் ஓப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இது முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ எஃப்21 ப்ரோ சீரிஸின் ஒரு பகுதியாகும். இதில் ஓப்போ எஃப்21 ப்ரோ மற்றும் ஓப்போ எஃப்21 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

இந்த ஓப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனை ஆப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள், அமேசான்.இன் மற்றும் ஓப்போ ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,900 ஆகும். 6.43 இன்ச் எஃப்ஹெச்டி + அமோல்ட் டிஸ்பிளே கொண்ட இந்த மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் ஆனது 680 குவால்காம் ஸ்னாப்ட்ராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ எஃப்21 ப்ரோ ஏஐ ட்ரிபிள் ரியர் கேமராவுடன் 64எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் கொண்டுள்ளது. இது 33w பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 4,500 எம்எஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

ஏப்ரல் 15 முதல் 21 வரை ஓப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு சலுகை வழங்கப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், ஐடிஎஃப்சி எஃப்சி, பேங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கி க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி ஓப்போ எஃப்21 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 10% கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது

அதோடு இந்த கார்டுகளை பயன்படுத்துவோர்கள் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ-ஐ பெறலாம். மேலும் பஜாஜ் பின்செர்வ், டிவிஎஸ் க்ரெடிட்ஸ், ஐடிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிபி வங்கி, கோடக் வங்கி, ஐசிஐசிஐ கன்சியூமர் பைனான்ஸ், மஹிந்திரா பைனான்ஸ் மற்றும் ஸெஸ்ட் மனி போன்றவை வழங்கும் ‘ஈஸி டூ ஒன் பைனான்ஸ் ஸ்கீம்’ ஆப்ஷனையும் பெறலாம்.

மேலும் எக்ஸ்சேஞ் சலுகை மூலம் ஓப்போ எஃப்21 ப்ரோ பெறுவோருக்கு 70% பைபேக் சலுகை கிடைக்கிறது, ரூ.2000 எக்ஸ்சேஞ் போனஸும், ரூ.1000 லாயல்டி போனஸும் கிடைக்கிறது. அதோடு ரூ.1499க்கு ஓப்போ எம்32 நெக்பேன்டை பெறலாம். எக்ஸ்சேஞ் சலுகையில் ஓப்போ பயனர்களுக்கு ரூ.3000 போனஸும், மற்ற பயனர்களுக்கு ரூ.2000 போனஸும் கிடைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.