
-மதுரை கா.ராஜேஷ்கண்ணா
மறைக்கப்பட்ட மாவீரர் ராவ்துலாராம்யாதவ் (9 டிசம்பர் 1825 – 23 செப்டம்பர் 1863)
ஹரியானா மாநிலத்தில் ராம்புரா சமஸ்தானத்தில் ராஜா ராவ்பூரண்சிங்யாதவ் அவர்களுக்கு மகனாக பிறந்தார் ராவ்துலாராம்யாதவ்
துலாசிங் என்ற பெயரோடு வளர்ந்த ராவ்துலாராம்யாதவ் 5வயது முதலே போர்பயிற்சியும்,குதிரையேற்றமும் பயில தொடங்கினார்
தந்தை ராவ்பூரண்சிங்யாதவ் மரணத்திற்கு பிறகு தன்னுடைய 14ம் வயதில் “துலாராம்” என்ற பெயரோடு மன்னராக பட்டம் சூட்டிக்கொண்டார் ராவ்துலாராம்யாதவ்
ராவ்துலாராம்யாதவ் தனது உறவினர் ‘ராவ்கோபால்தேவ்யாதவ்’ மற்றும் யாதவபடைகளோடு ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து வீரப்போர் புரிந்தார்
1857-ம் ஆண்டு மே மாதம் 17-ம்தேதி 500பேர் கொண்ட படைக்கு தலைமையேற்று ராவ்கோபால்தேவ்யாதவ் உதவியுடன் வெற்றிபெற்றார் ராவ்துலாராம்யாதவ்
ஆங்கிலேயர்களுக்கு நிகரான ஆயுதபலம் பெற 5000 படைவீரர்களோடு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள்,பீரங்கிகள் போன்ற ராணுவதளவாடங்கள் தயாரிக்கும் ஆயுததொழிற்சாலையை உருவாக்கினார் ராவ்துலாராம்யாதவ்
பாரதநாட்டை கொள்ளையடித்து இந்து மக்களுக்கு கொடுமைகள் பல செய்திருந்தாலும், மொகலாய மன்னர்கள் பாபர்,அக்பரின் வம்சத்தில் வந்த கடைசி மன்னராக இருந்த பகதூர்ஷா-ஜாஃபருக்கு ஆங்கிலேயரை எதிர்த்த காரணத்தினால் பணஉதவி,ஆயுதஉதவி,உணவுபொருட்கள் போன்றவற்றை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ராவ்துலாராம்யாதவ்
ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் போராட்டகாரர்கள் அனைவருக்கும் ஆயுதஉதவி,வீரர்களுக்கு தேவையான உணவு,உடை,மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைத்தார் ராவ்துலாராம்யாதவ்
ஆங்கிலேயர்களை திசை திருப்பிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஈரான்,ஆப்கானிஸ்தான்,ரஷ்யா உள்ளிட்ட உலகநாடுகளை ஒருங்கிணைத்தார் ராவ்துலாராம்யாதவ்.ஆங்கிலேயர்கள் இத்திட்டத்தை ரகசியமாக அறிந்துகொண்டனர்
முன்னாள் பிரதமர் லால்பகதூர்சாஸ்திரியை போல மர்மமான முறையில் உடல்முழுதும் விஷம் பரவி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மரணம் அடைந்தார் ராவ்துலாராம்யாதவ்
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைபோரில் ராவ்துலாராம் யாதவ், ராவ்கோபால்தேவ் யாதவ் அவர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது! இந்த போரில் எண்ணற்ற யாதவவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்
வடஇந்தியாவில், குறிப்பாக ஹரியானா மாநிலத்தின் யாதவ கிராமங்கள் இந்தியாவின் ராணுவ கிராமங்களாக விளங்குவதற்கு முன்னோடியாய் திகழ்ந்தவர் ராவ்துலாராம்யாதவ்